Wednesday, February 16, 2011

கையாலாகாத பாஜக : இன்னும் எத்தனை வாய்ப்பு வேண்டும்?



கட்சி நடத்துவது எதற்கு?
ஆட்சியைப் பிடிக்கத்தான். 
ஆட்சி சும்மா கிடைக்குமா
தேர்தலில் ஜெயிக்க வேண்டும்.
தேர்தலில் ஜெயிக்க என்ன வேண்டும்?
மக்கள் செல்வாக்கு வேண்டும்.
 மக்கள் செல்வாக்கு சும்மா கிடைக்குமா
மக்கள் சேவை செய்ய வேண்டும்.
மக்கள் சேவை என்றால் கோவில் கட்டினால் போதுமா?
முட்டாளே அது யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற போது கிளப்பப் பட வேண்டிய பிரச்சினை.
சரி இப்போ என்ன பிரச்சினை இருக்கு?
இப்போ என்ன பிரச்சினை இருக்கு என்று தெரியாததனால் தான் நீ இன்னும் பாஜகவில் இருக்கிறாய்!
என்ன சொல்கிறாய்?
முட்டாளே இப்போது தினமும் ஓர் ஊழல் என்று செய்தி ஊடங்களில் ஓவர்டைம் போட்டு செய்தி வாசிக்கிறார்களே உங்களுக்குத் தெரிய வில்லையா?
 எத்தனை விதமான ஊழல்கள், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், 2G  ஸ்பெக்ட்ரம் ஊழல்,  எஸ் பேன்ட் ஊழல், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வெங்காயத் தட்டுப்பாடு, மீனவர் பிரச்சினை, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம்,இன்னும் என்னவெல்லாமோ 
பிரச்சினைகள்...

 ஊழல்களில் லட்சக்கணக்கான கோடிகள் பணப் பரிமாற்றம்,  இதை எல்லாம் அனைத்து சாமானியனும் அறிவான். அவனுக்கு யாவைகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்து விட்டது. அதை நீங்கள் பிரச்சாரம் செய்து ஆளும் கட்சிக்குத் தலைவலி  தர வேண்டாமா? பாராளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவராக முரளி மனோகர் ஜோஷி தானே இருக்கிறார். இதை வைத்து நீங்கள் பிரச்சாரம் செய்யக் கூடாதா? முரளி மனோகர் ஜோஷியின் மாணவரான வி பி சிங் 64  கோடி போபோர்ஸ் பீரங்கி ஊழலை மட்டுமே வைத்து 1989 இல் ஆட்சியைக் கைப் பற்றினார். மு.ம.ஜோஷிக்கு ஏன் இந்த வித்தை தெரிய வில்லை. உங்களுக்கு ஏதாவது குட்டிச்சுவருக்கு கூரை போடுவது பஜனை மடம் கட்டுவது என்பது தான் பிரச்சினையா? ஆட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சி இன்னும் எத்தனை வாய்ப்புகள் உங்களுக்குத் தரும் என்று நினைக்கிறீர்கள்? பாராளு மன்றக் கூட்டுக் குழு விசாரணையிலேயே உங்களது குறிக்கோள் நிறைவடைந்து விட்டதா? அதாவது வசூலில் பங்கு? அல்லது ஆட்சி வேண்டுமா? ஆட்சி வேண்டுமானால் போபோர்ஸ் வழக்கை மறுபடியும் விசாரிக்க போராட்டம் செய்யுங்கள். ஊழல் செய்யும் ஆளுங்கட்சியைத் தூக்கியடிக்க வீதியில் இறங்குங்கள். ஏற்கனவே துனீசியா எகிப்து யேமன் நாடுகளில் மக்கள் கொந்தளித்து ஆட்சி மாற்றம் தொடங்கி விட்டது. நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதோ பாருங்கள் போபோர்ஸ் பீரங்கி எதற்கும் லாயக்கு இல்லாதது என்று ராணுவம் கூறுகிறதாக CNN IBN  செய்தி போடுகிறது. இதையெல்லாம் வீதிக்குக் கொண்டு வாருங்கள். போராடுங்கள். 

இல்லா விட்டால் பொங்கல் சுண்டல் சாப்பிட்டு விட்டு ஏதாவது பஜனை மடத்தில் ராமன் கதை பேசுங்கள். உங்களுக்கு ஆட்சிக்கு வர அருகதை இல்லை. 

Saturday, February 12, 2011

ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆறுதல்




கூட்டணிப் பேச்சு வார்த்தையில் தன்னைச் சேர்க்க வில்லை என்று இளங்கோவன் வருத்தப் பட்டிருக்கிறார். படித்ததும் கண்ணீரை அடக்க முடியவில்லை. பெரியாரின் பேரன், ஈவிகே சம்பத்தின் மகன் இப்படிப் புறக்கணிக்கப் படுவதை நினைத்தால் எந்த சுயமரியாதை கொண்ட தமிழனும், மன்னிக்கவும் இந்தியனும் கண்ணீர் விட்டுத்தான் ஆக வேண்டும். "கடவுள் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் , காங்கிரஸ் ஒழிய வேண்டும்" என்று பெரியார் சொன்னார். அந்தக் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாய் கிழியப் பேசும் இளங்கோவனுக்கு பேச்சு வார்த்தை நடத்த அனுமதி இல்லை என்றால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது சோனியாவைக் கண்டபடி திட்டினார். அதற்கெல்லாம் இளங்கோவன் மட்டுமே சரியான பதிலடி தந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆதரித்தவர்கள் எல்லாம் இப்போது திமுகவை ஆதரிக்கிறார்கள். அப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்த இளங்கோவன் இப்போதும் ஆளுங்கட்சியை  எதிர்க்கிறார். இதற்காக நீங்கள் இவரை ஒரு லூசு என்று நினைத்துவிடக் கூடாது. பெரிய அறிவாளியாக்கும். இவர் ஆதரித்தார் என்பதற்காக எஸ் ஆர் பாலசுப்ரமணியம் , யசோதா ஆகியோருக்கும் கூட பேச்சு வார்த்தைக் குழுவில் இடமில்லாமல் போனது. ஐயோ பாவம். 

காங்கிரஸ் கட்சி இவரை எவ்வளவு அவமானம் செய்தாலும்  கூட தாங்கிக் கொள்கிறார், ரொம்ப நல்லவர்... கொள்கையில் உறுதியாக நிற்கிறார்.  மெய் சிலிர்க்கிறது. காங்கிரசை தமிழ் நாட்டு ஆட்சியில் பங்கு கொள்ள வைப்பது என்பது இவர் கொள்கை, (தனியாக ஆட்சியமைக்க இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம். ----.....கனவுகளுக்குத் தடையில்லை.). 

அய்யா இளங்கோவரே சுய மரியாதை பேசிய குடும்பம் உங்களுடையது. ஆனால் அதை எல்லாம் உங்கள்  தந்தை மறந்துவிட்டு நேரு குடும்பத்துக்கு ஜால்றாபோட்டது போலவே நீங்களும் செய்கிறீர்களே. எதுக்குக் கஷ்டப்பட்டு ஊர் ஊராப் போய் ஆளுங்கட்சியைத் திட்டி காங்கிரசை வளர்க்கணும்வளர்த்து, வளர்த்து நேரு குடும்பத்துக்கு சொத்து சேர்க்கணும்? "ஆத்தைக் கடந்த பின் நீ யாரோ நான் யாரோங்கறது" தான் அரசியல் தத்துவம். அப்படி இருக்க  ஏன் போய் நேரு குடும்பத்துக்கு வால் பிடிக்கிறீங்க? உங்களை அவமானப் படுத்திய காங்கிரசுக்கு நீங்கள் சரியான பாடம் கற்பிக்கனும். அவர்கள் உங்களைப் புறக்கணித்து வேட்பாளர்களை அறிவிச்சா, அந்த வேட்பாளர்களைப் பற்றிய உண்மைகளைப் நீங்க புட்டுப் புட்டு வைக்கணும். அவங்களெல்லாம் உங்களை மாதிரி கட்சி வளர்க்க சிரமப் படாமல் எம் எல் ஏ ஆக நீங்க விட்டுறலாமா? நீங்க இதைச் செய்தீங்கன்னு சொன்னாத்தான் உங்களை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் ஆக்குவாங்க. நீங்களும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகலாம். இல்லாங்காட்டி இந்தியப் பிரதமர்கூட ஆகலாம். அதென்ன ராகுல் காந்தி என்ன பட்டத்து இளவரசனா? நீங்க சும்மா இருந்தீங்கன்னா எப்படி? உங்களுக்கும் பதவி வேண்டாமா? ஒரு நியாயமான காங்கிரஸ்காரன் பிரதமர் ஆகிறதை நாங்க பாக்க வேண்டாமா

என்னவோ போங்க சொல்றதைச் சொல்லீட்டேன். அப்புறம்  உங்க  பாடு.   

Sunday, February 6, 2011

பெரியார் அண்ணா செய்யாததைச் செய்து காட்டிய எஸ்.வி.சேகர்



தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தங்களது வாழ் நாளில் செய்ய முடியாததைச் செய்து காட்டியவர் எஸ் வி சேகர். காஞ்சி மடம் ஒரு காமக் கிழத்தியர் குடியிருப்பு என்று திராவிட இயக்கத்தினர் கூடச் சொல்லக் கூசும் செய்தியை ஜெயலலிதாவுக்குச் சொல்லி ஜெயேந்திரனை உள்ளே தள்ளிய உத்தமன் எஸ் வி சேகர். இது வரைக்கும்  பிரதமர்கள் ஜனாதிபதிகள் எல்லாம் அந்த ஆள் காலிலே விழுந்திருக்கிறார்கள் . அதற்கெல்லாம் அந்த ஆள் தகுதி இல்லாதவன் என்று அந்த ஆள் அருகிலே இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும். ஆனால் பார்ப்பான் என்ற காரணத்தினால் அதை அவர்கள் ரசிக்கவே செய்தார்கள்.


எல்லாச் சேனல்களில் இந்த ஆள்தான் இந்துக்களின் மத குரு என்பது போல் மாயப் பிரச்சாரம். அதை எல்லாம் தவிடு போடி ஆக்கியது அண்ணன் எஸ்.வி.சேகரின் வாக்கு. பார்ப்பனனாக இருந்தாலும் ஒரு சுத்தத் தமிழனைப் போல நடந்து கொண்டார். 

இவருக்கு தமிழ் மீது ஆர்வமா கோவமா என்பதைவிட இவர் வார்த்தைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இவர் தான் தூர்தர்சன் மட்டும் இருந்த காலத்தில் ஒரு மேடையில் சொன்னார் , "திராவிடக் கட்சிகளால் தமிழ் நாட்டில் ஹிந்தி படிக்க முடியாமல் போனது, அதனால் தமிழ் நாட்டுக் காரர்கள் யாரும் எட்டு மணிக்கு மேல் டிவி பார்க்க முடியவில்லை, " என்று. 

இவரது ஆதங்கத்தைப் போக்கவோ என்னவோ இப்போது பாருங்கள் எத்தனை டிவி சேனல்கள் தமிழில் பார்க்கப் பார்க்கத் தீர மாட்டேன்  என்கிறது. தமிழ் நாட்டுக்கு நல்லதே செய்யும் எஸ்.வி.சேகர் இன்னும் ஒரு நல்லது செய்ய வேண்டும், எப்படி?

மகாத்மா காந்தி சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசைக் கலைத்து விட வேண்டு என்று சொன்னார். இப்போது எஸ்.வி.சேகர் காங்கிரசில் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரது கனவுகளை நிறைவேற்றியவர், காந்தி கனவை நனவாக்க நாமும் வாழ்த்துவோம். 

Saturday, February 5, 2011

தமிழ் நாடு - தேர்தலுக்குப்பின் கூட்டணி மாற்றம் : சோதிடம்



விரைவில் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் ஆளும் கட்சி செய்யும், ஆட்சிக்கு வர எதிர்க்கட்சியும் என்ன வேண்டுமானாலும் செய்யும். 

சரி பல்லாக்குத் தூக்கும் கட்சி என்ன செய்யும்? இந்தக் கேள்வி எம்மைக் குடைந்ததால் நாமும் கருத்துக் கணிப்பு நடாத்திப் பார்த்தோம். அதில் சரியாக பதில் கிடைக்க வில்லை. எனவே ஒரு சோதிடரை அணுகினோம், அவர் சொன்னது வருமாறு,  "பகலில் சூரியன் தெரிவதாலும், இரவில் நட்சத்திரங்கள் தெரிவதாலும்,  திங்களுக்குப் பின்னால் செவ்வாய் வருவதனாலும், மேயிற்குப் பிறகு ஜூன் வருவதாலும்பல்லாக்குத் தூக்கும் கட்சியின் குறிக்கோள்மத்தியில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுதல். மாநிலத்தில் தன் கட்சிக்காரர்களுக்கு தோதாக காண்ட்ராக்ட் வாங்கிக் கொடுப்பது, மாநிலக் கட்சி காவிக் கட்சியினை அண்டாமல் பார்த்துக் கொள்வது, போன்ற நாட்டு நலனுக்கான திட்டங்கள் இருக்கும் என்று யூகிக்கலாம்."
  
'சரி, யார் ஆட்சிக்கு வருவார்கள் ?' என்று கேட்கப் பட்டதற்கு, "அதிக இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சிக்கு வரும்," என்றார். 
'அது எந்தக் கட்சி?'  என்றதற்கு, "மக்களின் மனதில் இருப்பது தான்," என்றார். 

"மக்களின் மனதில் யார் இருக்கிறார் ?" என்றதற்கு 
"யாராய் இருந்தால் என்ன? ஈஸ்வரகங்கைச்  சீமையிலே சென்ற பாராளுமன்றத்தேர்தலில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாதா?" என்றார். 
"அப்படி என்ன நடந்தது? " என்றதற்கு, "செத்தவன் பிழைத்தான், தோற்றவன் வென்றான். உடன்பாடு செய்தார்கள்,  கன்று அழைக்கும் வார்த்தையின் பொருளில் இருக்கும் கட்சித் தலைமைக்கு ஆதரவாக,  ரகசியம் சொல்லும் ஊர்க் கோவிலின் பெயரைக் கொண்ட மீசையில்லாத ஆண் ஆதரவு தருவார். வேறு  கட்சிக்குள் உள்குத்து நடக்கும் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் மோதிக்கொள்வார்கள். உளவுத்துறை புகுந்து விளையாடும். ஆட்சி பறிபோகலாம். புதிய ஆட்சி அமையலாம். எதோ ஒரு ஜால்ராவை வைத்து தவறான கூட்டணியில் இருந்து  விட்டோம் என்று அறிக்கை விட்டு ஊழலில் பங்கு கொடுத்த கட்சித் தலைமைக்கு எதிராக மேலிடக் கருத்துக்களைப் பரப்பி கூட்டணியில் இருந்து பிரிந்து புதிய கூட்டணியை அமைக்கலாம். அறிக்கை விட்ட முதல் ஜால்ராவுக்கு மாநில தலைவர் பதவி அளிக்கலாம். பிறகு வரப்போகும் ஊராட்சித் தேர்தலில் இரண்டு மாநகராட்சிகளைப் பெற்றுக் கொண்டு புதிய அத்தியாயத்தைத் தொடங்கலாம். வைகோவும் பாண்டியனும் நொந்து போகலாம். மார்க்சிஸ்டுகள் புதிய ஆட்சியால் பாதிக்கப் பட்ட அரசு ஊழியர்களுக்காக உண்டியல் குலுக்கலாம். இதெல்லாம் நடக்கலாம் நடக்காமலும் போகலாம். அது அது,அந்த அந்த தசா புத்திகளைப் பொறுத்தது. ", என்றார். 

சோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

Tuesday, February 1, 2011

அரசு ஊழியர் ஒய்வு பெரும் வயது: சில யோசனைகள்

வதந்தி மலரின் சிறப்பு நிருபர் கட்டவிழ்த்து விட்ட செய்தி என்னவென்றால், அரசு ஊழியர்களின் ஒய்வு வயது 60 ஆகிறதாம். இந்த செய்தியின் உண்மைத்தன்மையை விட நாம் முன்யோசைனையுடன் அரசுக்குச் சொல்ல வேண்டியவைகள் நிறைய உள்ளன.
இளைஞர்களுக்கு வேலை வேண்டும் முதியவர்களே தொடர்ந்து இருந்தால் அரசு வேலையை செவ்வனே எப்படிச் செய்ய முடியும்?

ஓட்டு வங்கிக்காக இதனைச் செய்யாமல் நாட்டு நலனுக்காக சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்தியிலே 60 என்னும் போது மாநிலத்தில் 60 ஆகலாம் தப்பில்லை. ஆனால் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் அந்தச் சலுகையைக் கொடுக்கக் கூடாது. மாநிலத்தில் பல ஊழியர்கள் தகுதி குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.

அனைவருக்கும் 60 என்று நீட்டிக்காமல், தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் ஒய்வு வயதை நீட்டிக்க வேண்டுகிறோம். அதாவது பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் 58 வயது வரை தன்னைத் தகுதி உயர்த்திக் கொள்ளத் தெரியாத ஒருத்தருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஏன் தண்டமாக அரசு சம்பளம்? அப்புறம் முக்கியமான இன்னும் ஒரு விஷயம், ஓய்வு வயது உயர்த்தப் பட்டதால் வேலையிலிருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை நியமனம் கூடாது. ஏன் கூடாது ? இவர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கும் கூடுதலாக மீண்டும் ஓர் அரசு வேலையா? இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும். தகுதி அற்ற மற்றும் குற்றம் புரிந்து இருக்கும் ஊழியர்கள், மருத்துவ விடுப்பில் அடிக்கடி சென்ற ஊழியர்கள் ஆகியோருக்கு இந்தவகை பதவி நீட்டிப்பு கூடாது.
இதை நாட்டு நலனுக்காகச் சொல்கிறோம். கேட்டால் கேளுங்கள்.

தன்னையும் தமிழர் தலைவரையும் திட்டிக் கொண்ட சோனியா

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=369861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

மேற்கண்ட இணைப்பில் சென்று தினமணி செய்தியினைப் படியுங்கள், எனக்குத் தோன்றியதைக் கீழே தந்துள்ளேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்.


பதவிக்கும் பணத்துக்கும் பித்துப் பிடித்து அலைவது தப்பு என்று இந்திய அன்னை சொல்லியிருக்கிறார்கள். எனக்கென்னமோ படித்துப் பார்த்தால் அது தலைவரைத் திட்டியது போல் தான் தெரிகிறது.

சபரி யாத்திரைக்கும் சாலைப் போக்குவரத்துக்கும் மீன்பிடிக்கவும் தடை : உச்ச நீதிமன்றத்துக்கு யோசனை.

விலங்குகள் நலச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கில் உச்சா நீதிமன்றம் ஜல்லிக்கட்டைத் தடை செய்யலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறது. அவர்கள் சொல்வதும் சரிதான் என்று எண்ணுகிறேன்.
தினத்தந்தியில் வந்த செய்தியினை நீங்கள் படியுங்கள்.

இதன் சுட்டி கீழே காட்டப் பட்டுள்ளது. உங்களது கணினியில் கீழே உள்ள எழுத்துரு சரியாகத் தெரியவில்லை என்றால் தினத்தந்தி வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள். அல்லது தினத்தந்தி வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=624409&disdate=2/2/2011


UeL• NÖYÛR SÖjL• «£•T«¥ÛX, AR]Ö¥ ^¥¦eLyÛP RÛP ÙNšVXÖUÖ? GÁ¿ R–ZL AWreh r¢• ÚLÖŸy| ÚL•« «|†R‰.

^¥¦eLyÛP RÛP ÙNšVeÚLÖ¡, «XjhL• SX YÖ¡V• RÖeL¥ ÙNšR UÄ, r¢• ÚLÖŸyz¥ Œ¨ÛY›¥ E•[‰. A•UÄ, ÚS¼¿ ‡T‡L• BŸ.«.W®‹‡WÁ, H.ÚL.TySÖVe BfÚVÖŸ APjfV ÙTto ˜Á“ «NÖWÛQeh Y‹R‰.

AÚTÖ‰, «XjhL• SX YÖ¡V• NÖŸ‘¥ B^WÖ] ™†R Yeg¥ WÖÇ TtoYÖ YÖ‡|ÛL›¥, `LP‹R ^]Y¡ 14-‹ ÚR‡ ˜R¥ 19-‹ ÚR‡YÛW R–ZL†‡¥ SÛPÙT¼\ ^¥¦eLyz¥ 2 ÚTŸ T¦VÖf E•[]Ÿ. 215 ÚTŸ LÖV• AÛP‹‰•[]Ÿ' GÁ¿ i½]ÖŸ.

AR¼h R–ZL AWr YegÛX TÖŸ†‰ ‡T‡L• i½VRÖY‰:-

I‹ÚR SÖyL¸¥, ^¥¦eLy|eh 2 ÚTŸ T¦VÖf E•[]Ÿ. 200 ˜R¥ 300 ÚTŸ YÛW LÖV• AÛP‹‰•[]Ÿ. ÚLÖŸy| LLÖ‚ÛT•, «‡˜Û\LÛ[• —½, C‹R «T¢R• SP‹‰•[‰, ÚYRÛ] A¸ef\‰. UeL• NÖYÛR SÖjL• «£•T«¥ÛX. G]ÚY, ^¥¦eLyÛP RÛP ÙNšVXÖUÖ?

CÛR RÛP ÙNšV ÚY|• GÁ¿ SÖjL• ÙNÖ¥X«¥ÛX. C‰ U¡VÖÛReh¡V, TÖW•T¡V «Û[VÖyPÖL C£eLXÖ•. B]Ö¥ pX TÖ‰L֐“ SÛP˜Û\L• YheLTP ÚY|•. ^¥¦eLyÛP JµjhT|†R R–ZL AWr pX L|ÛUVÖ] SPYzeÛLLÛ[ G|eL ÚY|•.

CªYÖ¿ ‡T‡L• i½]Ÿ.

^¥¦eLyÛP SP†‰• J£ AÛU‘Á Yeg¥, ^¥¦eLy|eh AÄU‡ A¸eh• A‡LÖW•, UÖYyP LÙXePŸLºeh A¸eLTP ÚY|• GÁ¿ YÖ‡yPÖŸ.

AR¼h ‡T‡L•, `CÁÄ• B›W• ÚTŸ NÖL ÚY|• GÁ¿ «£•“f¾ŸL[Ö?' GÁ¿ AYÛW TÖŸ†‰ ÚLyP]Ÿ. ‘Á]Ÿ, «NÖWÛQÛV J†‡ ÛY†R]Ÿ.

அதாவது ஜல்லிக்கட்டினை தடை செய்யலாம் என்ற அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.
நாம் ஏற்கனவே ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கவச உடை வேண்டுமென்று ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளோம். மேற்கொண்டு விவரங்களுக்கு அதைப் படியுங்கள் என்று கேட்டுக்கொண்டு வேறு விவரங்களுக்கு வருவோம்.

2 பேர் பலி 215 பேர் காயம் என்றதற்கு ஜல்லிக்கட்டினைத் தடை செய்யலாம் என்று யோசனை கூறினால், பின்கண்ட யோசனைகளையும் நாம் கூறவேண்டி வரும்....

100 பேர் பலியான சபரிமலை யாத்திரையைத் தடை செய்யலாம்.
500 பேருக்கும் மேல் மீனவர்கள் இறந்து விட்டதால் கிழக்குக் கரை மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யலாம்.
சாலை விபத்துக்களில் தினம் தோறும் பலர் சாவதால் சாலைப் போக்குவரத்தினைத் தடை செய்யலாம்.

நான் சொல்வது சரி தானே உச்ச நீதிமன்றத்திற்கு யோசனை வழங்கினேனே தவிர அவர்கள் அதாவது மை லார்ட்கள் சொன்னதைத் தப்பாக நான் கூறவில்லை. எப்படி நம் சமயோசிதம்?