Saturday, March 19, 2011

தமிழின உணர்வாளர்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய சட்டமன்றத்தேர்தல்.


மிழின உணர்வாளர்களின் எண்ணப்படியே வைகோ தற்போது அண்ணாதிமுக கூட்டணியிலிருந்து விலகி விட்டார். ஜெயலலிதா என்பவள் தான் எப்போதும் பாப்பாத்தி என்று காட்டிக்கொள்பவர். அய்யங்காரு ஆத்து திமிர் அவருக்கு எப்போதும் இருக்கும். பதவிக்கு வந்ததும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் மனோபாவம் அவரிடம் எப்போதுமே உண்டு.

அடிக்கடி உணர்சிப்பிளம்பாகும் வைகோ இவரைத் தேவையில்லாமல் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார். நாமும் இந்தத் தேர்தலில் தேவையில்லாமல் இந்தப் பெண்ணை ஆதரித்து இருப்போம்.

அய்யா சீமானே! நீரும் தான் கருணாநிதியை எதிர்க்கிறோம் என்று சொல்லி இந்த அம்மையாரை ஆதரிக்காதேயும்.

ஜெயலலிதாவின் கூட்டில் தற்போது இருக்கும் கைத்தடிகளில் பரிதாபத்துக்குரிய ஒரே நபர் தா. பாண்டியன் தான். அவருக்கு அங்கே என்ன கிடைக்கிறதோ? யார் கண்டார்கள்.

தமிழின உணர்வாளர்களே, தேர்தல் வந்தால் கண்டிப்பாக யாருக்காவது ஓட்டுப் போட்டேயாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? யாருக்குப் போடுவீர்கள் ஓட்டு?   ஈழத்தில் தமிழினத்தை அழித்த கருணாநிதி-காங்கிரஸ்-டபுள் ஏஜண்டுகள்- சாதிக்கட்சிகள் கூட்டணிக்கா? பார்ப்பன பேய்-சீன,சிங்கள அடிவருடிகள் மார்க்சிஸ்ட்-மானங்கெட்ட எடுபிடிகள்-கூட்டணிக்கா? யாருக்குமே நாம் வாக்களிக்க வேண்டியதில்லை. கையில் மையிட்டு கறைபடிந்து கொள்ளவேண்டியதில்லை. 

வாரிசு அரசியல் நடத்தும் குற்றப்பரம்பரைகள்  கொண்ட கூட்டணிக்கட்சிகள் ஆட்சியைத்தக்க வைத்து மீண்டும் மீண்டும் நாட்டைக் கொள்ளையிடப் போகின்றன. ஐந்தாண்டுகள் பொறுத்து விட்ட தென்னகத்து பூலான் தேவியும் குடித்துவிட்டு சட்டமன்றத்துக்கு வரவிருக்கும் குடிகார நாயும் மக்களுக்காக ஆட்சி நடத்துவார்களாம்.  நாம் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம்.

தற்போது வைகோ எடுத்த முடிவு  சரி என்றே படுகின்றது. பொறுத்திருங்கள் கருணாநிதி இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாரில்லை,   ஸ்டாலினும் அழகிரியும் மாறன் மகனும் கனிமொழியும் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொள்ளத்தான் போகிறார்கள்.

இன உணர்வாளர்கள் ஓரணியில் திரட்ட வேண்டிய பெரும் பொறுப்பு வைகோவிற்கு இருக்கிறது. பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், சீமான், பாரதிராஜா, வைகோ, இன்னும் ஏராளமானோர் ஓரணியில் வரவேண்டும் அண்ணா, பெரியார் கனவுகள் மெய்ப்பட வேண்டும். 

வைகோ தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று நினைத்து இந்தப் பதிவு எழுதப்பட்டது. வைகோ இந்த முடிவிலிருந்து பின் வாங்கினால் படித்ததை மறந்து விடுங்கள் என்று தண்டனிட்டு வேண்டிக்கொள்கிறேன். 

1 comment:

  1. முன்றாவது அணி வரும் என்று காத்து கொண்டு இருந்தன், கடைசியுள் வைகோ தேர்தலை புறகணிக்க போகின்றேன் என்று கூறி உள்ளார்.... இது சற்று வருத்தம் தெரிவிக்கிறது...... இவரை போன்ற இன உணர்வாளர்கள் தேர்தலில் ஒரு வலிமையான முன்றாவது அணி அமைய பாடு படவேண்டும் .......

    ReplyDelete