Sunday, March 6, 2011

இந்திரா காந்தி பேரனின் திருமணத்தைப் புறக்கணித்த ராஜீவ் காந்தியின் வாரிசுகள்.



வருண் காந்திக்கு காசியிலே திருமணம். எல்லாரும் அறிந்ததே. இவர் ராஜீவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியின் மகன் ஆவார். உங்களுக்குத் தெரியும். இன்று ராஜீவ் சஞ்சய் இருவரும் இல்லை. அதுவும் உங்களுக்குத் தெரியும். ராஜீவுக்கு முன்பே சஞ்சய் அரசியலுக்கு வந்தவர். இவருக்கு முன்பே இறந்து விட்டவர். சஞ்சய் இருந்திருந்தால் ராஜீவ் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. 

சரி இதையெல்லாம் ஏன் நான் சொல்கிறேன்?

இன்று வருண் காந்தியின் திருமணத்திற்கு ராஜீவ் குடும்பத்தில் இருந்து ஒருவரும் செல்ல வில்லை. இத்தனைக்கும் வருண் நேரில் சென்று இத்தாலியிலிருந்து டூரிஸ்ட் விசாவில் வந்து காந்தி குடும்பப் பெயரைத் தழுவிக் கொண்டாலும்  தன்னுடைய பெரியம்மா சோனியா என்ற மரியாதையில் சென்று திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். சரி கொழுந்தனாரின் மகன் தானே என்று சோனியாவோ சித்தப்பா மகன் என்று பிரியங்காவோ ராகுலோ சென்று திருமணத்தைக் காணவில்லை.

என்னதான் மனஸ்தாபம் என்றாலும் திருமணம் போன்ற விசேசங்களுக்குக் கூடவா செல்லக் கூடாது. இந்தியர்கள் யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். ஒரு வேலை இத்தாலியில் இப்படி எல்லாம் இருக்கலாமோ என்னவோ யார்கண்டது?

ன் மகனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை அதனால் கொழுந்தனாரின் மகன் திருமணத்திற்குச் செல்லவில்லையா சோனியா? 

சொல்லப்போனால் சஞ்சய் சாகாமல் இருந்திருந்தால் ராஜீவ் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. பிரதமர் ஆகியிருக்க முடியாது. ஈழத்தில் கொலைகள் செய்திருக்க முடியாது. செத்திருக்க முடியாது. சோனியாவும் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. ராகுலும் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அமேதியில் MP  ஆகியிருக்க முடியாது. ஆழம் தெரியாமல் காலைவிட்டு இப்போது காலை ஒடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

அதாவது நான் சொல்ல வருவது என்ன வென்றால் வருனுக்குப் பாத்தியப்பட்ட சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இத்தாலியர்கள் குறைந்த பட்ச நன்றியைக் காட்டவாவது திருமணத்திற்குச் சென்றிருக்கலாம்.

 என்ன நான் சொல்றது?

1 comment:

  1. உண்மைதான். திருமணத்திற்கு அவசியம் சென்றிருக்கவேண்டும் சோனியாவும்,ராகுலும்.
    ஆனால் இதெல்லாம் நமது பண்பாடு. இவர்களுக்கு என்ன வந்தது ?

    ReplyDelete