Saturday, February 26, 2011

தமிழ் : உலகில் அதிகம் பேசப்படும் இருபது மொழிகளில் ஒன்று


எத்தனை தோல்விகள், எத்தனை அவமானங்கள், எத்தனை விரக்திகள், எத்தனை மிரட்டல்கள், சொல்லிக்கொண்டே போகலாம்...இருந்தாலும் தமிழின் பெருமையை அழிக்க முடியாது, தோழர்களே...இதோ உங்களுக்காக நம் பெருமையை நாம் தெரிந்து கொள்ள இந்தப் பதிவு....


உலகில் உள்ள மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் எத்னோலாக் என்ற இணையதளம் உலகத்தில் உள்ள மொழிகள், அவற்றின் பயன்பாடுகள், அவைகள் பேசப்படும் நாடுகள், அவைகளைப் பேசுவோர் பற்றி ஆராய்ச்சி செய்து அவைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிடும். இவர்கள் 2009 ஆம் ஆண்டு 

Ethnologue: Languages of the World Sixteenth Edition

 என்ற நூலை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் உலக மொழிகளின் தரவரிசையை  வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழுக்கு 18 ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் 17 நாடுகளில் தமிழ் பேசப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  

6.5 கோடிப்பேர் தமிழை முதன்மை மொழியாகப் பேசுவதாக அந்த நூல் சொல்கிறது.

Ethnologue: Languages of the World Sixteenth Edition




ஆனால், அதே நிறுவனம் வெளியிட்ட தனது பதினைந்தாம் வெளியீட்டில் தமிழுக்கு பதினேழாம் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 6.8 கோடியாக இருந்தது. இந்தியர்கள், சிங்களர்கள், தமிழர்கள், விதி, கடவுளர்கள் எல்லாம் சேர்ந்து கொன்று போட்டபின் இப்போது வெறும் 6.5 கோடி பேர் மட்டும் தமிழ் பேசுகிறர்கள். இப்போது இந்திய அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை எடுத்து வருகிறது அதில் உண்மைகள் மறைக்கப் படாமல் இருந்தால் எத்தனை பேர் இந்தியாவில் தமிழ் பேசுகிறார்கள் என்று தெரிய வரும். 

Ethnologue: Languages of the World Fifteenth Edition




வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு,  நாம் கோருவது என்ன வென்றால் உங்களது நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 'வீட்டில் பேசும் மொழி என்ன?' என்றால், தமிழ் என்று அச்சப் படாமல் சொல்லுங்கள். தமிழ் பேசுவோரின் உண்மையான எண்ணிக்கையை உலகுக்குக் காட்டுவோம்.

இந்தப் பட்டியலைப் பாருங்கள் தமிழை விடக் குறைந்த எண்ணிக்கையில் பேசும் மொழியை உடையவன் எல்லாம் தனக்கென ஒரு நாட்டை வைத்துள்ளான். தமிழுக்கென்று ஒரு நாடு இந்தப்பூவுலகில் படைக்கப்படவேண்டும் என்பது என் தீராத ஆசை. 

தமிழனுக்கு என்று எவனாவது தனிநாடு கேட்டால் உங்களால் உதவ முடியாட்டாலும் பரவாயில்லை, தடுக்க முயற்சியினைச் செய்யாதீர்கள். 

No comments:

Post a Comment