Tuesday, January 25, 2011

ஜனவரி 26 சுதந்திர தின வாழ்த்துக்கள்.



தலைப்பைப் பார்த்ததுமே கடுப்பாகியிருப்பீர்கள் குடியரசு தினத்துக்குப் பதிலாக சுதந்திர தினம் என்று சொல்கிறானே சாவு கிராக்கி என்று. இதில் ஒன்றும் குற்றமில்லை சுதந்திரதினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் மேடையில் ஓர் இந்தியப் பிரதமரே பேசி இருக்கிறார். அவருக்கு பாரத ரத்னா விருதையும் கூடக் கொடுத்திருக்கிறார்கள். அவர் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு மட்டும் நான் சொல்கிறேன்.

ராஜீவ் காந்தி, ராஜீவ் காந்தி என்று (இருவர் அல்ல) ஒருவர் இருந்தார். அவர் தானுண்டு தன் ஏரோப்ளேன் உண்டு என்று இருந்தார். விதி யாரை விட்டது? சஞ்சய் காந்தி செத்ததனால்  அரசியலுக்கு வந்து, இந்திரா காந்தி இறந்ததினால், பதவிக்கு வந்தவர். ஆட்சியில் இருக்கும் போது ஏதாவது ஒரு மாநில அரசைக் கலைப்பதில் ஆர்வமாக இருப்பார். தமிழ் நாட்டு ஆட்சியைப் பிடிக்கப் படாத பாடு பட்டார். செத்தும் முடியவில்லை. சரி அதைப் பிறகு பார்ப்போம். ஒரு முறை தமிழ் நாட்டுக் குடிசை ஒன்றுக்கு வருகை தந்த போது,  "தொட்டிலில் தூங்குறது யாரு குழந்தையா?", என்று கேட்ட மாமேதை. இரவு உடையில் பொது மேடைக்கு வந்தவர். உலகத்தில் எந்த நாட்டுப் பிரதமருக்கும் கிடைக்காத மரியாதையை சிங்களர்கள் கொழும்பில் ராணுவ அணிவகுப்பில் இவருக்குக் கொடுத்தார்கள். உலகத்தில் பிற நாட்டு ராணுவ வீரனிடம் அடிவாங்கிய ஒரே பிரதமர், என்ற பெருமை இவருடையது. மேற்கண்ட காணொளியில் இதைக் காணலாம்.  அந்த அடிக்குப் பயந்தோ என்னவோ சிங்களர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். கடைசிவரை தான் தமிழர்களுக்கு அநீதி இழைத்துவிட்டோம் என்பது தெரியாமலேயே இறந்து விட்டார். இன்னும் இவர் கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். இவரை விடக் கொடூரமான முறையில் தமிழர்களை அழித்தார்கள், அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இவ்வாறாக இருப்பதனால் ஜனவரி 26 மற்றும் ஆகஸ்ட் 15  இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத எனக்கும் பாரத ரத்னா தரலாம் தப்பில்லை.


No comments:

Post a Comment