Thursday, January 20, 2011

எல்லோரும் நாத்திகரே!



கடவுளை நம்புகிறவர்கள் எல்லாம் நம்பாதவர்களைப் பழிப்பது, "நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவன்", என்று. நாத்திகம் என்றால் தந்தை பெரியார் மட்டுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும். என்னைப் பொறுத்த அளவிற்கு இந்தியாவில் அனைவரும் நாத்திகரே.


உங்களுக்கு இதை நான் விளக்குகிறேன்.

இந்தியாவைப் பொறுத்த அளவிற்கு மூன்று மதங்கள் உள்ளன. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம். இவைகள் மூன்றும் சேர்ந்து சொல்லும் கடவுளைப் பற்றிய விளக்கங்கள் 100% எனக்கொள்வோம். இந்து மதத்தை நம்புபவர் பிற மதத்தை நம்பமாட்டார். அப்படியானால் இவர் 33% மட்டும் கடவுளை நம்புகிறார். மீதி 66% இவர் கடவுளை நம்பவில்லை. அதாவது பிற மதங்களின் விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இவர் 66% நாத்திகர் ஆகிறார். அடுத்து முஸ்லிம் இவர் 33% மட்டும் கடவுளை நம்புகிறார். 
அதாவது தன் மதம் என்ன  சொல்கிறதோ அதை மட்டும் நம்புகிறார். பிற மதங்களை, அவர்களது விளக்கங்களை இவர் ஏற்றுக் கொள்வதில்லை. இவரும்   66% நாத்திகர் ஆகிறார். இவ்வாறே கிறிஸ்தவரும்.


அதாகப்பட்டது, எந்த ஒரு தனிமனிதனும் இந்தியாவைப் பொறுத்த அளவிற்கு நாத்திகன் இல்லாமல் இல்லை. எனவே இனிமேலாவது பிற மதங்களை நம்பமறுக்கும் பகுத்தறிவைத் தன் மதத்தில் இருக்கும் கட்டுக் கதைகளைப் பற்றி, கொஞ்சமாவது சிந்தித்து தெளிவாகிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


"கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக."

No comments:

Post a Comment