Friday, January 28, 2011

மார்க்சிசம் பேசும் மாபாவிகள்



தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப் பட்டதற்காக ஊர்வலம் போனார்கள் தமிழ் நாடு மார்க்சிஸ்டுகள். புல்லரிக்கிறது. இவர்களது பாசம். ஈழத்திலே இனக்கொலை நடந்த போது உள்நாட்டுப் பிரச்சினை என்று தப்பித்துக் கொண்டவர்கள். 

ஏன்? சீனா சிங்களனின் கூட்டாளி இவர்கள் சீனாவின் புகழ்பாடிகள்.  
போகட்டும்...இவர்கள் பிற நாட்டு உள்விவகாரங்களில் தலையிடமாட்டார்கள். ஆனால் சிரியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் பாலஸ்தீன விடுதலை ஆதரவு மாநாட்டுக்கு மட்டும் போவார்கள். இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள். அது மட்டும் உள்நாட்டு விவகாரம் இல்லையாம். 

சே குவாரா சொன்னான், "எந்த ஒரு அநீதியைக் கண்டபோதும் ஆத்திரத்தால் அதிர்ந்தீர்களானால்,    நீங்கள் ஏன் தோழன் ஆவீர்கள்." ஈழத்து அநீதியை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. பாலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கிறார்களாம். இன்று தான் தமிழக மீனவன் கொல்லப் பட்டானா? இது வரை யாருமே சாகவில்லையா? தேர்தல் வரும் தங்களது இருப்பினைக் காட்டியாக வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இப்போது.

சீன ஜால்ராவான மார்க்சிஸ்டுகள், இவர்களின் தலைவர்கள் எல்லாரும் மலையாளிகள் வங்காளத்தான்கள். வங்காளத்தான்கள் பங்களாதேஷ் வாங்கிக் கொடுத்தான்கள் ஈழத்தைத் தடுத்து விட்டான்கள். தமிழகத்தில்  கடல் சார் பல்கலைக் கழகம் அமைய வேண்டும் என்றதற்கு பார்லிமெண்டில் சட்டமாக்க முடியாமல் அறிக்கையைக் கிழித்த நாசகாரர்கள். பாசம் பொங்கும் வீதி நாடகம் ஒன்றை நேற்று சென்னையில் நடத்தினார்கள். கேவலம்.

ஜெயேந்திரன் (சங்கராச்சாரி) கைதுக்கு கண்டனம் தெரிவித்த அறிவு ஜீவிகள். இதை ஏன் செய்தார்கள்? லங்கா ரத்னா விருது வாங்கிய (The Hindu News Paper (Also called Mount Road Maha Vishnu)) ராமுக்கு காஞ்சி மடத்தில் செல்வாக்கு. ராம் தன்னை மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் கபடதாரி. போகட்டும் அது மட்டுமா? ஜெயேந்திரன் திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று சொன்ன அரசியல் புரோக்கர். சீனாவுக்கு ஆதரவான ஜொள்ளு சாமியார் கைதைக் கண்டிக்காமல் விட்டால் எஜமான் சீனாவுக்கு வருத்தம் வரும் அல்லவா?

பதினாறு வயதில் கம்யூனிசம் அறுபது வயதில் ஆன்மிகம் இது இயற்கையாக சிந்திக்கத் தெரியும் மனிதனிடத்தில் வரும் சிந்தனை. தயவு செய்து உங்களுக்கு கம்யூனிச சிந்தனை வந்தால் மார்க்சிஸ்டுகள் பக்கம் போகாதீர்கள். தா.பாண்டியன் போன்ற ஈழ ஆதரவு கம்யூனிஸ்டுகளை ஆதரியுங்கள். மார்க்ஸ் ஆத்மா சந்தோசப் படும்.

No comments:

Post a Comment