Friday, January 14, 2011

இந்தியாவில் இஸ்லாத்திற்குப் பலியான முதல் ஆள் தமிழன்.


தமிழனின் பெருமைகள் ஒன்று இரண்டல்ல சொல்வதற்கு கோடிக்கணக்கில் இருக்கிறது. சொல்லாமல் விடப்பட்ட பெருமைகளை மட்டும் நான் சொல்கிறேன்.

மலையாளிகள் எல்லாம்  தமிழர்களாய் இருந்த ஏழாம் நூற்றாண்டில், கொடுங்களூர் என்ற சேர நாட்டுச் சிற்றரசினை சேரமான் பெருமான் என்ற சற்றே  மனநிலை பாதிக்கப் பட்ட மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு மாலை நேரத்தில் மப்படித்துவிட்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே நிலா ஒன்று தெரிந்தது, கொஞ்ச நேரத்தில் அது பிளந்து மறுபடியும் ஒன்றாக அவன் கண்ணுக்குத் தெரிந்தது. அவனுக்குப் பைத்தியம் தலைக் கேறியது. தனது அரசவையில் இருந்த அனைத்து சோதிடர்களையும் அழைத்தான், அனைத்து சோதிடர்களும் வந்தனர். அனைவரிடமும் மன்னன் கேட்டான், "ஏன் நிலா பிளந்தது? மறுபடியும் ஏன் ஒன்றானது? ". இவனது மனநிலையை அறிந்த அவர்கள் இந்தக் கிறுக்கனுக்கு என்ன சொல்வது என்று யோசித்து ஆளுக்கொரு ரீல் விட்டனர். இதில் எல்லாம் மன்னனுக்கு திருப்தி ஏற்படவில்லை. மன்னனோ இதற்கு பதில் உடனே கிடைத்தாக வேண்டும் என்று தையா தக்கா என்று குதித்தான். இவனை எப்படி சமாளிப்பதென்று அனைவரும் யோசித்தனர்.


இதற்கிடையில் இலங்கை செல்வதற்கு வந்த அரேபியா வணிகர்கள் வரும் வழியில் சேர நாட்டுக்கு வருகை தந்தனர். மன்னனது பிரச்சனையைக் கேள்விப் பட்டனர். புரிந்து கொண்டனர். உள்ளூரிலேயே குப்பை கொட்டுபவர்களை விட நாடு விட்டு நாடு வந்து வணிகம் செய்யும் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தனர். சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டனர். மன்னனிடம் வந்து இது இறைவனின் விளையாட்டு, இதைப் பற்றி இன்னார் இன்ன இடத்தில் இன்ன உபதேசத்தில் இன்னபடி சொல்லி இருக்கிறார்கள் என்று கதை அளந்தனர்.

எப்போதுமே தமிழனுக்கு உள்ளூர்க்காரனை விட வெளியூரில் இருந்து வந்து கதை அளப்பவனைக் கண்டால் பிடிக்கும். சேரமான் பெருமானுக்கும் இது பிடித்துப் போயிற்று. தான் உடனே மெக்கா வருகிறேன் என்று ஆரம்பித்து விட்டான். அரேபியா வணிகர்கள், தாங்கள் இலங்கை போய் வந்தபின் கூட்டிச் செல்வதாக உறுதியளித்து விட்டு சென்றனர். திரும்பி வருவதற்குள் மன்னன் நாட்டைக் கூறு போட்டு தன்னுடைய அடிப் பொடிகளுக்கு எல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டு மதம் மாறிக் கொண்டு  புனிதப் பயணம் மேற்கொள்ளத் தயாரானான்.

அரேபியர்கள் இலங்கையில் இருந்து திரும்பி மன்னனைக் கூட்டிக் கொண்டு கிளம்பினர்.

அப்புறம் மற்ற கதையைப் பார்ப்போம். நாடு மன்னன் இல்லாததாலும் புதிய சிற்றரசர்களாலும் சின்னா பின்னம் ஆனது. மக்களும் வெறுத்துப் போயினர். பழைய கிறுக்கனே பரவாயில்லை என்று நினைக்க ஆரம்பித்தனர். அவன் வந்தால் தேவலாம் என்று இருந்தனர். ஆனால் ரொம்ப நாள் கழித்து மன்னனிடம் இருந்து கடிதங்களை அரேபியர்கள் கொண்டு வந்தனர். மன்னன் திரும்பும் போது பாதிவழியில் இறந்து விட்டதாகவும் ஆனால் கடிதம் கொடுத்ததாகவும் சொல்லி கடிதங்களைக் காட்டினர். அதில் அரேபியர்கள் மசூதி கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டு இருந்தது. அதன் படி கொடுங்களூரில் சேரமான் பெருமான் மசூதி கட்டப் பட்டது. அது இன்றும் கொடுங்களூரில் இருக்கிறது. அதற்கு அப்துல் கலாம் கூடச் சென்று வந்தார். நீங்கள் கூடப் படித்து இருப்பீர்கள்.

மேற்கண்ட விவரத்தில் இருந்து நீங்கள் யூகித்து இருப்பீர்கள், அரேபியர்கள் மன்னனை மிரட்டி கடிதம் வாங்கிக் கொண்டு அவனைக் கொன்று போட்டிருப்பார்கள் என்று. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

இவ்வாறாக இந்தியாவில் இஸ்லாத்துக்குப் பலியான முதல் ஆள் தமிழன் தான் என்ற பெருமையையும் நாம் பெற்றுள்ளோம்.


No comments:

Post a Comment