Friday, January 14, 2011

செம்மொழி


தமிழுக்குச் செம்மொழித்  தகுதி   கிடைத்த பிறகு எல்லா மொழிக்காரனுகளும் தங்களோட மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். தமிழுக்கு எல்லாத்தகுதியும் இருந்தும் இந்திய யூனியன் அரசால் இவ்வளவு ஆண்டுகள் தாமதப் படுத்தப் பட்டது. மொழி வல்லுனர்கள், பொதுமக்கள், ஆர்வலர்கள் எல்லாம் பல்லாண்டுகள் போராடி இறுதியில் 2004 ஆம் ஆண்டில் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது. செம்மொழிக்கான வரை முறையை இந்திய யூனியன் அரசு வேண்டுமென்றே தற்போது தளர்த்தி விட்டது. ஆனால் கன்னடம், தெலுங்கு ஆகியவற்றிற்கு கேட்ட உடனே செம்மொழித் தகுதி வழங்கப் பட்டது.  தற்போது தமிழை விட தகுதி குறைந்த  பிற மொழிகள் எல்லாம் செம்மொழி என்று அறிவிக்கப் பட்டுவிடும் போல இருக்கிறது. காரணம் அரசியலும் அரசாங்கத்தின் அப்பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளும். இன்னொரு காரணம் தமிழ் மட்டுமே செம்மொழி அல்ல என்றும்  சொல்ல வேண்டும்.  

சரி இருக்கட்டும் நம் பங்குக்கு நாமும் கேட்போம் 

Basic, FORTRAN, COBOL, Pascal, ALGOL, C, C++, HTML, XML, அப்புறம் Assembly Language மற்றும் இன்ன பிற மொழிகள் எல்லாம் செம்மொழி என்று அறிவிக்க வேண்டுமாய் அன்பும் பண்பும் பொங்கக் கேட்டு வைப்போம். 

2 comments:

  1. பாதிக்கு பாதி சமஸ்கிரதம் புழங்கும் மலையாளமும் செம்மொழியாம்
    உங்க ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு

    ReplyDelete
  2. அட ! நீங்கள் கேட்பதும் சரிதான். தமிழ் ஏதோ 1500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்றே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். மலையாளம், கன்னடம் என தமிழிலிருந்து பிறந்த மொழிகளுக்கும் கொடுத்தார்களெனில் தமிழுக்கு செம்மொழித் தகுதியை மதிப்பிழக்கச் செய்வதற்குத்தான் போலும். தமிழ் மொழியின் மதிப்பைக் குறைப்பதற்காகவே செம்மொழிக்கான தகுதிகளைக் குறைத்து மற்ற மொழிகளுக்கும் செம்மொழி மதிப்பைக் கொடுக்கிறார்கள்.

    ReplyDelete