Sunday, January 9, 2011

தமிழ் நாட்டுத் தேர்தல் கூட்டணித் தத்துவம்


நான் கடந்த 1989 முதல் கண்டு கேட்டு உணர்ந்த,  கூட்டணி மாற்றங்கள், அரசியல் கட்சிகளின் புகழுரை, தனி மனிதத் தாக்குதல், கேவலமான தொகுதி உடன்பாடு, தியாகம் செய்யப்பட கொள்கைகள், பதவி பேரம், பணபலம், இன்ன பிற... எல்லாம் சேர்த்து  பின் கண்ட வரையறையைச் சொல்கிறேன் 

தமிழகத் தேர்தல் கூட்டணி என்பது நேற்றைய எதிரிகளோடு நாளைய நண்பர்களை எதிர்த்து பதவிக்காகத் தற்காலிகமாக அமைத்துக் கொள்வது. 


இங்கு நேற்றைய எதிரிகள் என்பது சென்ற தேர்தலில் எதிரணியில் இருந்தவர்கள். 
நாளைய நண்பர்கள் என்பது இன்று எதிரணியில் இருப்பவர்கள் நாளை இந்த அணிக்கு வரலாம்.


மேற்கண்டது முதல் தத்துவம், இதன் துணைத் தத்துவங்கள், வாரிசுக்காக இன அழிப்புக்காக என்று பல்வேறு வகையான உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அதை நீங்களே வரையறுத்துக் கொள்ளலாம். 

No comments:

Post a Comment