Wednesday, February 23, 2011

தமிழ் நாட்டின் விலை ரூ 1950 கோடி

அம்பானியின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கும்.

அப்படியானால் தமிழ் நாட்டிற்கு என்ன விலை? நமக்கு என்ன விலை?

உங்களுக்கு அரசால் புரசலாக சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். தெரிய வில்லை என்றால் நீங்கள் வருத்தப் பட வேண்டும். மத்தியில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போதெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வளவு தொகை கொடுக்கப் பட்டது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடும். நாமும் படித்திருப்போம். அதாவது கட்சி மாறி ஓட்டுப் போட அல்லது கட்சி தாவ என்பதற்கு அது. இருக்கட்டும்.

சென்ற பாராளுமன்றத்தேர்தலில் ஒருவர் தேர்தலில் வென்று விட்டார். அவரை எதிர்த்து தோற்றவர் மிகப் பெரும் ஜனநாயகவாதி. ஆனால் அவர் தயவால் தான் பக்கத்து நாட்டில் சொந்த இன மக்கள் மீது படுகொலைகள் சர்வ சுதந்திரமாக நடந்தேறின. அப்படிப் பட்ட கட்சி விசுவாசியை எப்படி மேலிடம் கைவிடும்? வேன்றவரிடம் மன்றாடி மிரட்டி சாம தான பேதம் செய்து வென்றவர் தோற்றதாக அறிவிக்கப் பட்டது. அதற்கு கைமாறியது ஐம்பது கோடி என்று வதந்தி இருக்கிறது. இதை வைத்து தமிழ் நாட்டின் விலையை நாம் நிர்ணயிக்கலாம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐம்பது கோடி. ஒரு தொகுதிக்கு ஐம்பது கோடி என்றால். முப்பத்தி ஒன்பது தொகுதிக்கு ஓராயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கோடி. எனவே தமிழ் நாட்டின் விலை, 2009 நிலவரப்படி ரூ 1950 கோடிகள். தமிழ் நாட்டில் மொத்தம் 6.8 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொருவரின் மதிப்பு ரூ 287 ஆகும். நடப்பு நிலவரம் தேர்தல் வந்தாலோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலோ தெரியவரும்.

1 comment:

  1. spectrum il அடித்ததை வைத்து ஒரு வோட்டுக்கு 40000 குடுக்கலாம் நண்பா.............

    ReplyDelete