Friday, February 18, 2011

ஈழத் தமிழர்களே கடைசி அனுதாபத்தையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

ஈழத்தமிழர்களை ஆதரிப்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு தேசத்துரோகமாகவே இப்போது பார்க்கப் படுகிறது. இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திய தேசியத்தைப் பேசும் இந்தியர்கள். ஈழத்தில் தமிழர்களது உரிமையைப் பேசும் போது தங்களுக்கும் உரிமைகள் இருக்கும் என்பதை அறியாது அனைத்தையும் இழந்து நிற்கும் பரிதாபமான ஜந்துக்கள்.

ஈழத்தமிழர்களை தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துத் தமிழர்களும் ஆதரிக்கவில்லை லட்சத்தில் ஒருவன் தான் ஆதரிக்கிறான். இந்திய சிங்கள உளவுத்துறைகளின் கைகளில் சிக்கி ஈழத்தில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் வடக்கு மாகாணத் தமிழர்கள் என்று பிரிந்து கிடக்கிறார்கள். ஈழத்தில் ஒரு மாகாணத் தமிழன் சாகும் போது இன்னொரு மாகாணத் தமிழன் சிரிக்கிறான். ஆனால் இரண்டு மாகாணத் தமிழர்கள் சாகும் போதும் தமிழ் நாட்டுத் தமிழன் வேதனைப் படுகிறான்.

தேசத்துரோகமாகவே கருதப் பட்டாலும், தமிழ் நாட்டில் இருக்கும் தமிழன் ஈழத்தை ஆதரித்தான். வைகோ,சீமான், நெடுமாறன், இன்னும் ஏராளமானோர் சிறை சென்றனர். முத்துக்குமார் போல பலர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் இந்திய சிங்கள உளவுத்துறைகளின் ஏவலுக்கு அடிபணிந்து தமிழக மீனவர்கள் மீது ஈழ மீனவர்கள் தாக்குதல் நடாத்துகிறார்கள். இது கொஞ்சமும் சகித்துக் கொள்ள இயலாது.

இது தொடர்ந்தால் இதைத் தடுத்த நிறுத்த வேண்டியது ஈழத் தமிழர் தலைவர்களின் பொறுப்பு, இல்லையேல் தமிழகத்தில் உங்கள் மீது வெறுப்பு தான் வரும்.

இதுவரை ஐநூறு தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுட்டுத் தள்ளி இருக்கிறது. அத்தனை கணக்கையும் ஈழ மீனவர்கள் மேல் போட இரு நாட்டு உளவு அமைப்புகளும் முயற்சி செய்யும். முட்டாள் ஈழ மீனவன் அந்தப் பழியை வாங்கிக் கொள்வான். தமிழகத்தில் எஞ்சி இருக்கும் ஈழ ஆதரவு அற்றுப் போகும்.

ஒரு முறை பெரியார் சொல்லியது சரியென்று படுகிறது , "தமிழன் காட்டு மிராண்டி".

2 comments:

  1. I cant accept ur statement that we r seperated here as north and east.also the peoples who are attack the tamilnadu fishermans are not common tamil people.they are para military gangs.dont write false statement.think and write everything

    ReplyDelete
  2. ஈழம் மட்டுமல்ல தமிழர்கள் உலகெங்கும் ஒற்றுமையாக இருப்பதையே நாம் விரும்புகிறோம். உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திவிட்டு நடப்பதைக் கவனியுங்கள். ஒட்டுக்குழுவினரின் வேலை என்பதை நாமும் அறிவோம் ஒட்டுக்குழுவை ஆதரிப்பதை நிறுத்துங்கள் என்பதைத் தான் நாங்கள் ஆணித்தரமாகச் சொல்கிறோம். நீங்கள் ஒட்டுக் குழுவை ஆதரிக்கவில்லை, ஒத்துக்கொள்கிறோம், பிறகு ஏன் தெரிந்தே தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன, தற்போது தேர்தல் வந்து விட்டதால் இம்மாதிரி தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதையும் நாம் அறிவோம்.

    ReplyDelete