Wednesday, February 16, 2011

கையாலாகாத பாஜக : இன்னும் எத்தனை வாய்ப்பு வேண்டும்?



கட்சி நடத்துவது எதற்கு?
ஆட்சியைப் பிடிக்கத்தான். 
ஆட்சி சும்மா கிடைக்குமா
தேர்தலில் ஜெயிக்க வேண்டும்.
தேர்தலில் ஜெயிக்க என்ன வேண்டும்?
மக்கள் செல்வாக்கு வேண்டும்.
 மக்கள் செல்வாக்கு சும்மா கிடைக்குமா
மக்கள் சேவை செய்ய வேண்டும்.
மக்கள் சேவை என்றால் கோவில் கட்டினால் போதுமா?
முட்டாளே அது யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற போது கிளப்பப் பட வேண்டிய பிரச்சினை.
சரி இப்போ என்ன பிரச்சினை இருக்கு?
இப்போ என்ன பிரச்சினை இருக்கு என்று தெரியாததனால் தான் நீ இன்னும் பாஜகவில் இருக்கிறாய்!
என்ன சொல்கிறாய்?
முட்டாளே இப்போது தினமும் ஓர் ஊழல் என்று செய்தி ஊடங்களில் ஓவர்டைம் போட்டு செய்தி வாசிக்கிறார்களே உங்களுக்குத் தெரிய வில்லையா?
 எத்தனை விதமான ஊழல்கள், காமன் வெல்த் விளையாட்டு ஊழல், 2G  ஸ்பெக்ட்ரம் ஊழல்,  எஸ் பேன்ட் ஊழல், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, வெங்காயத் தட்டுப்பாடு, மீனவர் பிரச்சினை, வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கறுப்புப் பணம்,இன்னும் என்னவெல்லாமோ 
பிரச்சினைகள்...

 ஊழல்களில் லட்சக்கணக்கான கோடிகள் பணப் பரிமாற்றம்,  இதை எல்லாம் அனைத்து சாமானியனும் அறிவான். அவனுக்கு யாவைகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்து விட்டது. அதை நீங்கள் பிரச்சாரம் செய்து ஆளும் கட்சிக்குத் தலைவலி  தர வேண்டாமா? பாராளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவராக முரளி மனோகர் ஜோஷி தானே இருக்கிறார். இதை வைத்து நீங்கள் பிரச்சாரம் செய்யக் கூடாதா? முரளி மனோகர் ஜோஷியின் மாணவரான வி பி சிங் 64  கோடி போபோர்ஸ் பீரங்கி ஊழலை மட்டுமே வைத்து 1989 இல் ஆட்சியைக் கைப் பற்றினார். மு.ம.ஜோஷிக்கு ஏன் இந்த வித்தை தெரிய வில்லை. உங்களுக்கு ஏதாவது குட்டிச்சுவருக்கு கூரை போடுவது பஜனை மடம் கட்டுவது என்பது தான் பிரச்சினையா? ஆட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சி இன்னும் எத்தனை வாய்ப்புகள் உங்களுக்குத் தரும் என்று நினைக்கிறீர்கள்? பாராளு மன்றக் கூட்டுக் குழு விசாரணையிலேயே உங்களது குறிக்கோள் நிறைவடைந்து விட்டதா? அதாவது வசூலில் பங்கு? அல்லது ஆட்சி வேண்டுமா? ஆட்சி வேண்டுமானால் போபோர்ஸ் வழக்கை மறுபடியும் விசாரிக்க போராட்டம் செய்யுங்கள். ஊழல் செய்யும் ஆளுங்கட்சியைத் தூக்கியடிக்க வீதியில் இறங்குங்கள். ஏற்கனவே துனீசியா எகிப்து யேமன் நாடுகளில் மக்கள் கொந்தளித்து ஆட்சி மாற்றம் தொடங்கி விட்டது. நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இதோ பாருங்கள் போபோர்ஸ் பீரங்கி எதற்கும் லாயக்கு இல்லாதது என்று ராணுவம் கூறுகிறதாக CNN IBN  செய்தி போடுகிறது. இதையெல்லாம் வீதிக்குக் கொண்டு வாருங்கள். போராடுங்கள். 

இல்லா விட்டால் பொங்கல் சுண்டல் சாப்பிட்டு விட்டு ஏதாவது பஜனை மடத்தில் ராமன் கதை பேசுங்கள். உங்களுக்கு ஆட்சிக்கு வர அருகதை இல்லை. 

No comments:

Post a Comment