Tuesday, February 1, 2011

அரசு ஊழியர் ஒய்வு பெரும் வயது: சில யோசனைகள்

வதந்தி மலரின் சிறப்பு நிருபர் கட்டவிழ்த்து விட்ட செய்தி என்னவென்றால், அரசு ஊழியர்களின் ஒய்வு வயது 60 ஆகிறதாம். இந்த செய்தியின் உண்மைத்தன்மையை விட நாம் முன்யோசைனையுடன் அரசுக்குச் சொல்ல வேண்டியவைகள் நிறைய உள்ளன.
இளைஞர்களுக்கு வேலை வேண்டும் முதியவர்களே தொடர்ந்து இருந்தால் அரசு வேலையை செவ்வனே எப்படிச் செய்ய முடியும்?

ஓட்டு வங்கிக்காக இதனைச் செய்யாமல் நாட்டு நலனுக்காக சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மத்தியிலே 60 என்னும் போது மாநிலத்தில் 60 ஆகலாம் தப்பில்லை. ஆனால் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் அந்தச் சலுகையைக் கொடுக்கக் கூடாது. மாநிலத்தில் பல ஊழியர்கள் தகுதி குறைவானவர்களாகவே இருக்கிறார்கள்.

அனைவருக்கும் 60 என்று நீட்டிக்காமல், தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் ஒய்வு வயதை நீட்டிக்க வேண்டுகிறோம். அதாவது பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் 58 வயது வரை தன்னைத் தகுதி உயர்த்திக் கொள்ளத் தெரியாத ஒருத்தருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஏன் தண்டமாக அரசு சம்பளம்? அப்புறம் முக்கியமான இன்னும் ஒரு விஷயம், ஓய்வு வயது உயர்த்தப் பட்டதால் வேலையிலிருக்கும் அரசு ஊழியர் இறந்தால் கருணை நியமனம் கூடாது. ஏன் கூடாது ? இவர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கும் கூடுதலாக மீண்டும் ஓர் அரசு வேலையா? இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும். தகுதி அற்ற மற்றும் குற்றம் புரிந்து இருக்கும் ஊழியர்கள், மருத்துவ விடுப்பில் அடிக்கடி சென்ற ஊழியர்கள் ஆகியோருக்கு இந்தவகை பதவி நீட்டிப்பு கூடாது.
இதை நாட்டு நலனுக்காகச் சொல்கிறோம். கேட்டால் கேளுங்கள்.

No comments:

Post a Comment