Saturday, February 19, 2011

டபுள் ஏஜன்ட் ராமதாஸ் வாழ்க!




தமிழ் இன உணர்வு தமிழகத்தில் தலை தூக்காதிருக்க உளவு நிறுவனங்களுக்கு அவர்களது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் ஒரு டபுள் ஏஜன்ட் வேண்டும். அதற்கு சாதிக்கட்சித் தலைவர்களைப் பயன் படுத்திக் கொள்ள முயற்சி செய்தன. சாதிக்கட்சித் தலைவர்களான ராமதாசும் திருமாவளவனும் அவர்களது சரியான தேர்வானது. 

MGR காலத்தில் திமுகவை பலவீனப்படுத்த ராமதாசை இந்திய உளவு நிறுவனங்கள் பயன்படுத்தின என்பது அனைவரும் உணர்ந்த சேதிதான்.  




ஒரு முறை சுப்பிரமணிய சாமியின் லெட்டர் பேட் கட்சியின் வட இந்திய நிர்வாகி ஒருவன் சொன்னான் தமிழ் நாட்டை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று. சுப்பிரமணிய சாமி இந்திய உளவு நிறுவனங்களால் தமிழ், தமிழர், தமிழ் நாடு, ஈழம் ஆகியவற்றுக்கெல்லாம் எதிராக ஏவி விடப்படும் நாய் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. இவனது கட்சியால் முன்மொழியப் பட்ட தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை தமிழ் நாட்டில் சாதிக்கட்சி நடத்தும் ராமதாஸ் வழி மொழிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தமிழ் ஊடகங்கள் ராமதாசுக்கு டின்னுக் கட்டினதால், மனிதர் அதைக் கைவிட்டார்.  

இவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர்  மத்திய அமைச்சராக இருந்த போது காஞ்சி காம கேடி மடத்திற்கு ஆசி வாங்க அடிக்கடி செல்வார்.  காஞ்சி மடம் பராரிகளின்  மடம் என்பது இவர்களுக்குத் தெரியாதா?

சோனியாவின் கரத்தை வலுப்படுத்திக் கொண்டே ஈழத்தை ஆதரிக்கும் அதிசயப் பிறவி இவர். காங்கிரஸ் இருக்கும் வரை ஈழம் என்றுமே கிட்டாது. 

தன் மகனின் பதவிக்காக தன் சாதிக்காரர்களை எல்லாம் பயன்படுத்தி கட்சி நடத்தும் சாமார்த்தியசாலி இவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறி பதவியைப்  பிடிக்கும் கொள்கை மறவர் இவர். 

இப்போது முப்பத்தி ஒரு தொகுதிகளில் தமிழனை அழித்துச் சிங்களனை வாழவைக்கும் காங்கிரஸ்-கருணாநிதி கூட்டில்  களமிறங்குகிறார்.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை சகோதரி என்று சொல்லி இவர் மீண்டும் அண்ணா திமுகவினருக்குத் தாய் மாமன் ஆவார். 

அப்போதும் இவரது குடும்பத்துக்குப் பதவி கிடைக்கும் இவரது சாதிக்காரர்கள் அப்போதும் இவரை ஆதரிப்பார்களா?

4 comments:

  1. மிகவும் தேவையான , பரப்பப்பட வேண்டிய கருத்துக்கள் .
    உங்கள் தளத்தின் அகலத்தை அதிகபடுத்துகள்.
    1 template designer
    2 adjust width
    3 Entire blog- maximum என மாற்றுங்கள். ஆடியோ ப்ளேயர் வெளியில் வராமல் உள் அடங்கி இருக்கும்.

    ReplyDelete
  2. நண்பருக்கு,
    தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி. இப்போது உங்கள் ஆலோசனையை நான் பின்பற்றி இருக்கிறேன். சரி தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. இதையும் படிங்க சார்....http://ragariz.blogspot.com/2011/02/blog-post_19.html

    ReplyDelete